

புட்ஸால் யு-17 உலகக் கோப்பை கால்பந்து தொடர் பராகுவேயில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணி அழைப்பு நாடாக கலந்து கொள்கிறது.
உள்ளரங்க மைதானத்தில் 5 வீரர்கள் கொண்ட அணிகள் மோதும் ஆட்டமாக நடத்தப்படும் இந்த புட்ஸால் உலகக் கோப்பை தொடரை வரும் 20-ம் தேதி வரை முந்தியால் டி புட்ஸால் சங்கம் நடத்துகிறது. மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. ஏ பிரிவில் இந்தியா, பராகுவே, கேட்டலோனியா, கஜகஸ்தான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.
பி பிரிவில் கொலம்பியா, பெல்ஜியம், பிரேசில், ஆஸ்திரே லியா அணிகளும், சி பிரிவில் அர்ஜென்டினா, உருகுவே, மொராக்கோ, குரஸோ அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி சென்னையை சேர்ந்த புட்ஸால் வீரர் பரத்ராஜ் செல்வகுமார் தலைமையில் கலந்து கொள்கிறது.
இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை கேட்டலோனியா வையும், 13-ம் தேதி போட்டியை நடத்தும் பராகுவே அணியையும், 14-ம் தேதி கடைசி லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும் எதிர்கொள் கிறது.
இந்திய அணி விவரம்:
பரத்ராஜ் செல்வகுமார் (கேப் டன்), நரங் திவ்யானேஷ், சர்வக்யா ராவத், ரித்விக் வர்கீஸ், பிரித்விராஜ் குமார், சங்கேத், புளுரு விஷ்ருத், குணவந்த் (கோல் கீப்பர்), சித்தாந்த் கேஷவ், பிரதியுஷ், ஆனந்த் கத்ரி, பிரணவ் மனிஷ், ஜீத் சம்பத், ஜித் நீலகண்ட், ஹிரிடே பராக்.