நிர்வாகிகள் நிலையில்லை... கிரிக்கெட் செழிக்கும்: லோதா

நிர்வாகிகள் நிலையில்லை... கிரிக்கெட் செழிக்கும்: லோதா
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற உத்தரவு, கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி என்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா, "நிர்வாகிகள் வருவார்கள், செல்வார்கள். விளையாட்டு இனிமேல் செழிக்கும்" என்று கூறினார்.

லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இடையூறாக இருந்த பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டது. | வாசிக்க > >லோதா குழு டூ உச்ச நீதிமன்ற அதிரடி: 10 அம்சங்களில் 'பிசிசிஐ களையெடுப்பு'

இந்தத் தீர்ப்பு குறித்து பிசிசிஐ மறுசீரமைப்புக்கான பரிந்துரைகளை வழங்கிய குழுவின் தலைவரான முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா கூறும்போது, "இந்த தர்க்க ரீதியிலான விளைவு ஏனெனில், உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளை, பிசிசிஐ அமல்படுத்தாததுதான். பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தடைகளும் இருந்தது. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்போது இது நிகழக்கூடியதுதான்.

அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதனை மதித்து அதன்படி நடக்க வேண்டும். சட்டத்தை மதித்து நடக்கும் நாடு இது.

இது (உச்ச நீதிமன்ற உத்தரவு) கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி. விளையாட்டு இனிமேல் செழிக்கும். நிர்வாகிகள் வருவார்கள், செல்வார்கள். ஆனால் விளையாட்டு என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்" என்றார் லோதா.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறும்போது, "இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பானது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. தற்போதுதான் கிரிக்கெட் சரியான பாதைக்கு திரும்பி உள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்க விவகாரத்திலும் தெளிவு வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in