21 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபிபா தரவரிசையில் இந்தியக் கால்பந்து அணி 100-வது இடம்

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபிபா தரவரிசையில் இந்தியக் கால்பந்து அணி 100-வது இடம்
Updated on
1 min read

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் கால்பந்து அணி ஃபிபா தரவரிசையில் 100-வது இடம் பிடித்துள்ளது.

வியாழனன்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி நிகாரகுவா, லுதுவேனியா மற்றும் ஈஸ்டோனியா ஆகியவற்றுயன் 100-வது இடத்திற்கு முன்னேறியது.

1996-ம் ஆண்டு இந்திய அணி ஃபிபா தரவரிசையில் 94-ம் இடம் பிடித்தது, இதுதான் ஃபிபா தரவரிசையில் இந்தியக் கால்பந்து அணி பெற்ற அதிகபட்ச இடமாகும்.

கம்போடியா மற்றும் மியான்மரில் அன்னிய மண்ணில் இந்தியக் கால்பந்து அணி பெற்ற வெற்றியினால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளது.

வரும் ஜூன் 7-ம் தேதி லெபனான் அனிக்கு எதிராக சர்வதேச நட்பு முறை கால்பந்து போட்டியில் இந்திய அணீ மோதுகிறது, பிறகு ஜூன் 13-ம் தேதியன்று 2019 ஏ.எஃப்.சி ஆசியன் கோப்பை தகுதிச் சுற்றுக் கால்பந்து போட்டியில் கிர்கிஸ்தான் அணியைச் சந்திக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in