

சீனாவின் ஷூஹாய் நகரில் ஏடிபி சாலஞ்சர் நிலையிலான டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அர்ஜென்டினாவின் அகுஸ்டின் வெலோட்டியை எதிர்த்து விளை யாடினார்.
இதில் யுகி பாம்ப்ரி 6-1, 2-1 என முன்னிலை வகித்தபோது அதிகப்படியான சோர்வின் காரண மாக அகுஸ்டின் போட்டியில் இருந்து விலகினார். 47 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அகஸ்டின் விலகியதால் யுகி பாம்ப்ரி அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஏடிபி சாலஞ்சர் தொடரில் அரை இறுதிக்கு யுகி பாம்ப்ரி முன்னேறுவது இதுவே முதன் முறை. முழங்கை காயத்தில் இருந்து குணமடைந்த யுகி பாம்ப்ரி 2016ம் ஆண்டு சீசனை சிறப்பான முறையில் தொடங்கினார். பியூச்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற அவர், டேவிஸ் கோப்பை யில் நியூஸிலாந்தை 4-1 என வீழ்த்திய இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுகி பாம்ப்ரி கூறும்போது, ‘‘அரை இறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொடர் உண்மையாகவே கடின மாக உள்ளது. அழுத்தம் கொடுப் பதன் மூலமும், கடினமாக உழைப் பதன் வாயிலாகவும், வாய்ப்பு களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.