

உலக விளையாட்டு வீரர்களில், விற்பனை மதிப்பு மிக்க பிராண்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விளையாட்டு வீரர் தோனி மட்டுமே. இவர் 5-வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்கக் கூடைப்பந்து வீரர் லீ பிரான் ஜேம்ஸ் முதலிடம் வகிக்க கால்ஃப் வீரர் டைகர் உட்ஸ், டென்னிஸ் நட்சத்திரங்கள் பெடரர் மற்றும் நடால் ஆகியோர் அடுத்தடுத்த பிராண்ட் மதிப்பு இடங்களில் உள்ளனர்.
தோனியின் பிராண்ட் மதிப்பு 2014ஆம் ஆண்டு 20 மில்லியன் டாலர்கள், இது கடந்த ஆண்டில் 21 மில்லியன் டாலர்களாக இருந்தது.
ஸ்பார்ட்டான் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமிட்டி பல்கலைக் கழகம் ஆகியவற்றுடனான தோனியின் பேட் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகக் கூறப்படுகிறது. ரீபாக் நிறுவனம் முன்னதாக தோனியுடன் ஆண்டுக்கு 1 மில்லியன் டாலர் ஓப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தது.
அமெரிக்க கூடைப்பந்து வீரர் லீ பிரான் ஜேம்ஸின் 2014ஆம் ஆண்டு வர்த்தக மதிப்பு 37 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.