

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் சிவ கேசவன், நதீம் இக்பால், ஹிமன்சு தாகூர் ஆகிய 3 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்தி போட்டியில் பங்கேற்காமல், ஒலிம்பிக் கொடியின் கீழ் அணி வகுத்தனர்.
இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதுவே இந்திய தேசிய கொடியின் கீழ் நமது வீரர்கள் பங்கேற்க முடியாததற்கு காரணம்.
இது தொடர்பாக முன்னாள் விளையாட்டு வீரர்கள் பலர் கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளனர். இந்திய வீரர்கள் தேசிய கொடியுடன் அணி வகுக்க முடியாததற்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் நடைபெற்ற தவறுகள்தான் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
குளிர்கால ஒலிம்பிக்கில் பனியில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுகள் இடம் பெறும்.