

மிர்பூரில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்துள்ளது.
இந்திய அணியில் தவண் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக அஜிங்கிய ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மற்றபடி இந்திய அணியில் மாற்றமில்லை.
பாகிஸ்தான் அணி வருமாறு: குரம் மன்சூர், ஷர்ஜீல் கான், மொகமது ஹபீஸ், ஷோயப் மாலிக், சர்பராஸ் அகமது, உமர் அக்மல், அப்ரீடி (கேப்டன்), வஹாப் ரியாஸ், மொகமட் சமி, மொகமது ஆமீர், மொகமது இர்பான்.
டாஸ் வென்ற தோனி கூறியதாவது: முதல் போட்டியை ஒப்பிடும் போது இந்த பிட்ச் சற்றே வன்மையாகவும், புற்கள் நிரம்பியதாகவும் உள்ளது. மேலும் இப்போதைக்கு பனிப்பொழிவு இல்லை, போகப்போக பனிப்பொழிவு இருக்கலாம். எனவே பவுலர்கள் இந்த நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்துள்ளோம், என்றார்.