இஷாந்த் சர்மா மீது கங்குலி கோபம்

இஷாந்த் சர்மா மீது  கங்குலி கோபம்
Updated on
1 min read

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் மோசமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 9 ஓவர்களில் 72 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இந்நிலையில் இஷாந்த் சர்மா அணிக்கு தேர்வு செய்யப்பட்டதை கங்குலி கடுமையாக விமர்சித்துள்ளார். அனுபவமிக்க வீரரான இஷாந்த் சர்மாவால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவர் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் அவரை தொடர்ந்து அணியில் வைத்திருப்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.

ஒருநாள் அணியில் புஜாரா, ஜாகீர் கான் ஆகியோரை சேர்க்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் புஜாரா ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும்.விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து வருகிறார் என்று கங்குலி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in