

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டத்தில், மைக்கேல் கிளார்க் மற்றும் ஹிதினின் அபார சதத்தால் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள இங்கிலாந்து, இன்றைய ஆட்ட நேர முடிவில், 21 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.
அந்த அணியின் கார்பெரி 20 ரன்களுடனும், ரூட் 9 ரன்களுடனும் களத்தின் இருந்தனர். துவக்க ஆட்டக்காரர் குக் 3 ரன்களில் ஜான்சனின் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார்.
முன்னதாக, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ்சை, 9 விக்கெட் இழப்புக்கு 570 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
அந்த அணியின் மைக்கேல் கிளார்க் 148 ரன்களையும், ஹிதின் 118 ரன்களையும் குவித்து ரன் எண்ணிக்கையை வெகுவாக கூட்டினர்.
துவக்க ஆட்டக்காரர் ரோஜர்ஸ் 72 ரன்களையும், வாட்சன் 51 ரன்களையும் சேர்த்தனர். பெய்லி 53 ரன்கள் சேர்த்தார். ஹாரிஸ் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
இங்கிலாந்து தரப்பில் பிராட் 3 விக்கெட்டுகளையும், ஸ்வான் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் மற்றும் பனேசர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.