Published : 30 Mar 2017 04:40 PM
Last Updated : 30 Mar 2017 04:40 PM

ரஹானே அமைதியான பாணியில் ஆக்ரோஷமான கேப்டன்: இயன் சாப்பல் புகழாரம்

தரம்சலா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை தன் தலைமைத்துவத்தில் வெற்றிக்கு இட்டுச் சென்று தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்த ரஹானே குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் புகழ்ந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ரஹானே போன்ற ஒருவர் பொறுப்பு கேப்டனாக கிடைத்ததற்கு இந்திய அணி உண்மையில் அதிர்ஷ்டம் செய்துள்ளது என்றே கூற வேண்டும். ஏனெனில் கோலி இல்லாத போது அவரது பொறுப்பை சுமப்பது கடினம்.

அதாவது கோலியின் பாணியை கடைபிடிப்பதா அல்லது தன் வழியில் செல்வதா என்ற குழப்பம் ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்தக் கடினமான குழப்பத்திலிருந்து ரஹானே தனக்கேயுரிய பாணியில் தன் கேப்டன்சி முறையைக் கடைபிடித்தார். அவர் மிக அருமையாகவே செயலாற்றினார் என்றே நான் கருதுகிறேன்.

அவர் தனக்கேயுரிய விதத்தில் அமைதியாக ஆக்ரோஷமாகச் செயல்பட்டார். அணியை வழிநடத்த துப்பாக்கி ஏந்திய ஒரு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது நல்ல முறையில் திறமையாக செயல்பட வேண்டும், இவர் செய்யும் செயல்களுக்கு அணியினரின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

அதாவது ரஹானே ஆக்ரோஷமாக களவியூகம் அமைத்தது அணி வீர்ர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும், அதாவது வெற்றி பெறுவதற்காக கேப்டன் முனைப்பு காட்டுகிறார் என்று பவுலர்கள் அவருக்குப் பக்க பலமாக, ஆதரவாக செயல்படுவார்கள்.

கோலியும் இதனைச் செய்வார், ஆனால் ரஹானே தன் பாணியில் அணியை தன் பின்னால் திரட்டி வெற்றிக்கு இட்டுச் சென்றார். ரஹானே உண்மையில் அணியினரின் நம்பிக்கையை தன் அமைதியான ஆக்ரோஷம் மூலம் திரட்டியுள்ளார்.

இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x