இந்தியா ஏ அணியில் இர்பான், பிரவீன் நீக்கம்

இந்தியா ஏ அணியில் இர்பான், பிரவீன் நீக்கம்
Updated on
1 min read

இந்தியா 'ஏ' அணியிலிருந்து பிரவீன் குமார், இர்பான் பதான் ஆகிய இரண்டு கிரிக்கெட் வீரர்களும் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்தியா 'ஏ' அணிக்கும் மேற்கு இந்திய தீவுகள் 'ஏ' அணிக்குமிடைய மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றவுள்ளது.

இர்பான், பிரவீனுக்கு பதிலாக பஞ்சாப்பை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுலும், கர்நாடகாவை சேர்ந்த வினய் குமாரும் விளையாடவுள்ளனர்.

மேலும், இந்தியா 'ஏ' அணியின் இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் கேரளாவை சேர்ந்த வீரர் ஜெகதீஷ் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா 'ஏ' அணிக்கும் மேற்கு இந்திய தீவுகள் 'ஏ' அணிக்குமிடையே செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 12-ஆம் தேதி வரை மூன்று ஒரு நாள் போட்டிகளும், ஒரு டவண்டி20 போட்டியும், மூன்று நான்கு-நாள் தொடர்களும் நடைபெறவுள்ளன.

ஒரு நாள் மற்றும் டிவெண்டி 20 போட்டிகளுக்கு யுவராஜ் சிங்கும், நான்கு-நாள் தொடருக்கு செதேஷ்வர் புஜாராவும் இந்தியா 'ஏ' அணியின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in