

ஸ்பெயினின் பில்போ நகரில் பில்போ மாஸ்டர்ஸ் பைனல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதல் சுற்றில் ஆலந்து வீரர் அனிஸ் கிரியை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டம் 39வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 1 புள்ளிகள் கிடைத்தது.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி, சீனாவின் லைரென் டிங்கை தோற்கடித்தார். இதன் மூலம் வெஸ்லி 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆனந்த் தனது அடுத்த சுற்றில் சீனாவின் லைரென் டிங்கை சந்திக்கிறார்.