

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டெராயிடை கலந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தால் நடத் தப்பட்ட சோதனையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த மல்யுத்த வீரர் நர்சிங் ஸ்டெராய்டு என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது திட்டமிட்ட சதிச் செயல், நான் ஊக்கமருந்து பயன் படுத்தவில்லை என நர்சிங் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஹரியானாவில் உள்ள சோன்பேட் காவல் நிலை யத்தில் நர்சிங் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘‘சோன் பேட் சாய் மையத்தில் பயிற்சி எடுத்தபோது, எனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டெராய்டை கலந்துள்ளார்’’ என கூறியுள் ளார். டெல்லியில் உள்ள சத்ர சால் மையத்தில் மல்யுத்த பயிற்சி எடுத்து வரும் தேசிய அளவி லான போட்டிகளில் பங்கேற்கும் ஜுனியர் வீரர் அவர் எனவும் நர்சிங் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
நர்சிங் குறிப்பிட்டுள்ள அந்த இளம் வீரர் ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றுள்ள சுஷில்குமாரின் பயிற்சியாளரும் மாமனாருமான சத்பால் சிங்கிடம், பயிற்சி எடுத்து வருவ தாகவும் கூறப்படுகிறது. இதே மையத்தில்தான் சுஷில் குமாரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
நர்சிங்கின் உணவில் ஸ்டெராய்டை கலந்துள்ளதாக கூறப்படும் இளம் வீரர் சர்வதேச அளவிலான ஹெவி வெயிட் பிரிவில் போட்டியிடும் மல்யுத்த வீரரின் சகோதரர் என்றும் கூறப் படுகிறது.
தற்போது 17 வயதே நிரம்பிய அந்த வீரர் பிரான்சில் நடைபெறவிருந்த ஜூனியர் அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்க கடந்த ஜூன் மாதத்தில் சாய் மையத்தில் பயிற்சியில் இருந்திருக்கிறார். இவர் தான் நர்சிங் அறையில் நுழைந்து உணவில் ஊக்க மருந்தை கலந் திருக்கக்கூடும் என சந்தேகம் வலுத்துள்ளது.
இதற்கிடையே ஜூன் 5-ம் தேதி சோன்பேட் சாய் மையத்தில் வீரர் ஒருவர் மதிய உணவில் எதையோ கலந்ததாகவும் அப்போது அவரை சமையல்காரர் கையும் களவுமாக பிடித்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து சமையல் ஒகாரரை வைத்து அந்த வீரர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரிடம் மல்யுத்த சங்கத்தினர் ரகசிய விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் நேற்று நர்சிங் யாதவிடம் விசாரணை நடத் தியது. இந்த விசாரணை இன்றும் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் முடிவில் நர்சிங் யாதவுக்கு தடை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.