

ஏடிபி இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் லியாண்டர் பயஸ் - மார்டின் டெல் போர்ட்டோ ஜோடி தோல்வியடைந்தது.
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் ஏடிபி இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டி போர்ட்டோ ஜோடி, லக்சம்பர்க்கின் கில்ஸ் முல்லர் - அமெரிக்காவின் சாம் குவேரி ஜோடியை எதிர்த்து ஆடியது. இப்போட்டியில் பயஸ் - டெல் போர்ட்டோ 3 6, 4 6 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தது.
வீனஸ் வில்லியம்ஸ்
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான பிரிவில் நடந்த 3-வது சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 7-6, 6-1 என்ற செட்கணக்கில் செர்பிய வீராங்கனையான ஜெலீனா ஜான்கோவிக்கை போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
2-வது சுற்றில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீராங்கனையான ஏஞ் சலிக் கெர்பர், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சக நாட்டு வீராங்கனை யான ஆண்டிரியா பெட்கோவிக்கை வென்றார். மற்றொரு போட்டியில் சிமோனா ஹாலெப் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் டோனா வேகிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சானியா ஜோடி வெற்றி
பெண்களுக்கான பிரிவில் நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- செக் நாட்டின் பார்பரா ஸ்டிரைகோவா ஜோடி, 6 2, 6 3 என்ற செட்கணக் கில் இத்தாலியின் சாரா எரானி, போலந்தின் அலிஜா ரொசொல்ஸ் காவை வென்றது.