Published : 18 Sep 2016 11:49 AM
Last Updated : 18 Sep 2016 11:49 AM

மனைவியுடன் உயிர் தப்பிய ஷகிப் உல் ஹசன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஷகிப் அல் ஹசன் தன் மனைவி உம்மி அகமது ஷிசிருடன் ஹெலிகாப் டரில் சென்றார். காக்ஸ் பஜார் மாவட்டத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராயல் துலிப் கடற்கரை பகுதியில் ஷிகிப்பும், அவரது மனைவி உம்மியும் ஹெலி காப்டரில் இருந்து இறங்கினர்.

அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் தொழில் நுட்ப கோளாறு காரண மாக விபத்துக்குள்ளானது.

ஷகிப் அல் ஹசன் மற்றும் உம்மி அகமது ஆகியோரை இறக்கி விட்டுவிட்டு டாக்காவுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரானி கடற்கரை பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக் குள்ளானது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x