Published : 03 Apr 2017 10:10 AM
Last Updated : 03 Apr 2017 10:10 AM

டி20 கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வென்றது மேற்கிந்திய தீவுகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் மேற் கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவு கள் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கம்ரான் அக்மல் 48 ரன்களையும், பாபர் அசாம் 43 ரன்களையும் எடுத்தனர்.

வெற்றிபெற 138 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த மேற்கிந்திய தீவுகள் அணி, 2 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. ஆனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான எவின் லீவிஸ் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடி தனது அணியை கரைசேர்க்க போராடினார். 51 பந்துகளில் அவர் 91 ரன்களைக் குவிக்க, மேற்கிந்திய தீவுகள் அணி, 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக எவின் லீவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றபோதி லும் 4 போட்டிகளைக் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x