

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் யோகஷ்வர் தத் வென்ற வெண் கலப்பதக்கம் தங்கப்பதக்கமாக தரம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2012-ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவருக் கான மல்யுத்த போட்டியின் பிரீஸ்டைல் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரஷிய மல்யுத்த வீரர் பெசிக் குடுகோவ் 2013-ம் ஆண்டில் நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
பெசிக் குடுகோவின் இறப்புக்குப் பின் பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த அவரது ரத்த மாதிரியை சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் மீண்டும் பரிசோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அந்த பிரிவில் வெண் கலம் வென்ற யோகேஷ்வர் தத்தின் வெண்கலப்பதக்கம், வெள்ளிப்பதக்கமாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்நிலையில் அதே போட்டியில் தங்கம் வென்ற அசர்பைஜான் வீரர் டோக்ருல் அஸ்காரோவ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.
ஊக்க மருந்து
டோக்ருல், தடை செய்யப் பட்ட ஊக்க மருந்தை பயன்படுத் தியது தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் யோகேஷ்வர் தத்தின் பதக்கம் தங்கமாக தரம் உயர்த்தப்பட வாய்ப்புகள் உருவாகி உள்ளது. யோகேஷ்வர் தத் ஊக்கமருந்து சோதனையில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கப்பதக்கம் கிடைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலை சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் வெளியிடவில்லை.-