ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய மெஸ்ஸிக்கு மரோடானா வலியுறுத்தல்

ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய மெஸ்ஸிக்கு மரோடானா வலியுறுத்தல்
Updated on
1 min read

ஸ்கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் சிலி அணியிடம் தோல்வியடைந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி நேற்று முன்தினம் ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்த தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரராக வர்ணிக்கப் பட்ட லயோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக ஒரு கோப்பையை கூட வெல்லாமல் வெறும் கைகளுடன் ஓய்வு பெற்றுள்ளார். இடது காலை மந்திரக்கோல் போன்று செயல் படுத்தும் அவரது ஆட்டத்தை ரஷ்யாவில் நடைபெற உள்ள 2018 உலகக் கோப்பையில் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மெஸ்ஸியின் ஓய்வு முடிவானது உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது.

அதுமட்டும் அல்ல கால்பந்து உலகமே மெஸ்ஸி மீண்டும் தேசிய உடை அணிந்து களமிறங்க வேண்டும் என விரும்புகிறது. இதற்கிடையே மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டிகோ மாரடோனா வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் நான்சியோன் பத்திரிகை யின் இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி நீடிக்க வேண்டும். ஏனெனில் அவர் விளையாட வேண்டிய நாட்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. மெஸ்ஸிக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அது அணியை அவர் முன்னெடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்.

2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை யில் மெஸ்ஸி விளையாடி கோப்பையை வென்று பெருமை சேர்க்க வேண்டும். மெஸ்ஸியை ஓய்வு பெறுமாறு யார் சொன்னது? அர்ஜென்டினா கால்பந்து அணி தற்போது மோசமான கட்டத்தில் இருக்கிறது.

இவ்வாறு மாரடோனா தெரிவித்துள்ளார்.

இதேபோல அர்ஜென்டினா அதிபர் மாக்ரியும், மெஸ்ஸி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளார்.

கோபா தொடர் தொடங்கு வதற்கு முன்பு மெஸ்ஸியை, மாரடோனா கடுமையாக விமர்சித் திருந்தார். ஆளுமை திறனில் மெஸ்ஸி பின்தங்கி காணப்படுவ தாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அரையிறுதி போட்டி முடிவடைந்ததும் சாம்பியன் பட்டம் வெல்லாவிட்டால் அர்ஜென்டினா வீரர்கள் தாயகம் திரும்பக்கூடாது எனவும் எச்சரித் திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in