

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றியது.
கயானாவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. ஹோப் 71, ஜேசன் முகமது 59 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர், ஜூனைத் கான், ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
234 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷோயிப் மாலிக் 111 பந்துகளில், 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 101 ரன்கள் விளாசி னார். முகமது ஹபீஸ் 81, கேப்டன் சர்ப்ராஸ் அகமது 24, பாபர் அசாம் 16 ரன்கள் சேர்த்தனர்.
6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.