

புகழ்பெற்ற டென்னிஸ் வீரர்களான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஸ்பெயினின் ரபேல் நடாலும் ஒன்று சேர்ந்து இரட்டையர் போட்டியில் விளையாட உள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறும் லேவர் கோப்பை போட்டிக்காக இருவரும் கூட்டணி அமைத் துள்ளனர். லேவர் கோப்பை என்பது ஐரோப்பிய வீரர்களும் உலக அணி வீரர்களும் எதிர் எதிராக மோதும் போட்டியாகும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 22 முதல் 24-ம் தேதி வரை பராகுவே நாட்டில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
ஜான் போர்க் ஐரோப்பா அணிக் கும், மெக்கன்ரோ உலக அணிக் கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள் ளனர். இரு அணிகளிலும் தலா ஆறு வீரர்கள் இடம் பெறுவார்கள். அமெரிக்க ஓபன் போட்டிகள் முடிவடைந்த இருவாரங்களில் இந்த போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்த முடிவு செய்துள்ளனர். 3 நாட்கள் நடை பெறும் இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 9 ஆட்டங்கள், இரட்டை யர் பிரிவில் 3 ஆட்டங்கள் நடத்தப் படுகிறது. ஐரோப்பிய அணியில் விளையாட உள்ள பெடரரும் நடாலும் இணைந்து இரட்டையர் போட்டியில் களமிறங்குகின்றனர். இதற்கான அறிவிப்பு நேற்று நியூயார்க்கில் வெளியானது.
பெடரர், நடால் ஆகியோர் 31 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். சர்வதேச போட்டி களில் பெடரருடன் 34 முறை மோதியுள்ள நடால் 23 ஆட்டங் களில் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் முதன்முறையாக இணைந்து விளையாட உள்ளது ரசிகர்களிடையே இப்போதே எதிர் பார்ப்பை உண்டாக்கி உள்ளது.