மனதில் ஆஸி. தொடரே ஒலிக்கிறது: கேப்டன் விராட் கோலி கருத்து

மனதில் ஆஸி. தொடரே ஒலிக்கிறது: கேப்டன் விராட் கோலி கருத்து
Updated on
1 min read

இந்திய வீரர்களின் இதயமும், மனதும் ஆஸ்திரேலிய தொடருக்கு ஏற்கெனவே தயாராகி விட்டது என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறிய தாவது:

இந்த சீசனில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மிகப்பெரிய தொடராக எங்களுக்கு அமைந்தது. இந்த தொடரை 4-0 என நாங்கள் வென்றதுமே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக அணியை பலப்படுத்த முடிவு செய்துவிட் டோம். அணியில் உள்ள அனைவரது மனதிலும், இதயத்திலும் இதுதான் உள்ளது. ஹைதராபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு அருமையாக இருந்தது. டாஸில் வெற்றி பெற்றது மிகப்பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க உதவியது. வங்கதேச அணியும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்தது. பெரிய தொடரை நாங்கள் எதிர்கொள்ள உள்ள நிலையில் பந்து வீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்வதற்கான வழிகளை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக கண்டறிந்த னர். இது அணியின் பண்புகளை உணர்த்தியது. அதேவேளையில் நாங்கள் அதிக அளவில் உற்சாகமும் கொள்ளவில்லை.

இஷாந்த் சர்மாவின் கடைசி ஸ்பெல் தனிச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. பழைய பந்தில் அவர் ரிவர்ஸ் ஸ்விங்கை அருமையாக கையாண்டார். ஒவ்வொரு ஆட்டத் தையும் புத்துணர்ச்சியுடன் எதிர் கொள்கிறேன். ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாட முயற்சிக் கிறேன். ஆனால் அதிரடியாக அல்ல. தற்போது நான் விளை யாடும் முறையே எனக்கு சவுகரியமாக உள் ளது. இவ்வாறு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in