

என் மச்சான் தோனியைப் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளில் மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஆஃப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடந்த முதலாவது போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் வலைப்பயிற்சியில் மேற்கொண்ட இந்திய வீரர்கள் தோனி, பாண்டியாவுடன் பிராவோ உள்ளிட்ட மேற்கித்தியத் தீவுகளின் வீரர்கள் உரையாடிக் கொண்டிருந்த புகைப்படங்கள் பிபிசி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அப்பபுகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிராவோ "என் மச்சான் தோனியை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இரு அணிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பிராவோவின் ட்விட்டர் பதிவு
பிராவோவின் இந்தப் பதிவுக்குக் கீழ் இந்திய ரசிகர்கள் பலரும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிராவோவின் இப்பதிவு ஆயிரத்துக்கு மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் அணியைச் சேர்ந்த பிராவோவும், தோனியும் சென்னை சூப்பர் கிங்ஸில் ஒன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.