

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மக்கள் தெரிவு விருதுக்கு, இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, இந்த விருதை வென்ற இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தோனி.
முன்னதாக, 2010-ல் சச்சின் டெண்டுல்கரும், 2011 மற்றும் 2012-ல் இலங்கையின் குமார் சங்ககாராவும் இந்த விருதை வென்றுள்ளனர்.
ஐசிசி கிரிக்கெட் விருதுகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர்களுக்கான விருது பிரிவில் இந்தியாவின் தோனியும் கோலியும் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களுடன், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்தின் குக் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆகியோருடம் இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இருந்தனர். ரசிகர்கள் தங்களது வெற்றியாளரை ஆன்லைனில் தேர்ந்தெடுக்க ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில், அதிக வாக்குகள் பெற்று, இந்த விருதை தோனி வென்றுள்ளார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர்,
இந்த விருதை வெல்வது மிகப் பெரிய திருப்தியைத் தருகிறது. கிரிக்கெட்டின் முக்கியப் பங்குதாரரான ரசிகர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவதால் இவ்விருது மகத்தானது. எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.