முதல் டெஸ்டில் இன்று இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதல்: மிரட்டுவாரா முகமது அமீர்

முதல் டெஸ்டில் இன்று இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதல்: மிரட்டுவாரா முகமது அமீர்
Updated on
1 min read

மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செற்கிறது.

இந்த டெஸ்டில் அனைவரது பார்வையும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் மீதே இருக்கும் என கருதப்படுகிறது. 2010-ம் ஆண்டு இதே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது அமீர், ஆசிப் முகமது, சல்மான் பட் ஆகியோர் சிக்கினார். தடைகளுக்கு பின்னர் 6 வருடங்கள் உருண்டோடிய நிலையில் மீண்டும் சர்வதேச டெஸ்டில் அமீர் காலடி எடுத்துவைக்கும் முதல் ஆட்டம் இதுவாகும்.

சூதாட்டத்தில் சிக்கி தண்டனை பெற்ற யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத மிக அரிய வாய்ப்பாக மீண்டும் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக் காக களமிறங்குகிறார் 24 வயதான அமீர். பந்தை துல்லியமாக ஸ்விங் செய்வதிலும், யார்க்கர் வீசி திண றடிப்பதிலும் அமீர் கில்லாடி. சோமர்செட் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 36 ரன்க ளுக்கு 3 விக்கெட் கைப்பற்றியது அமீரினின் தன்னம்பிக்கையையை அதிகரிக்க செய்துள்ளது.

இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத் துடன் உள்ளது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக இந்த டெஸ்டில் விளையாடவில்லை.

அமீருடன் வகாப் ரியாஸ், சோகைல் கான், சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா ஆகியோரும் இங்கிலாந்து வீரர் களுக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ள னர். இந்த தொடரில் பேட்டிங்கில் இரு அணியின் மிடில் ஆர்டர்களும் முக்கிய பங்கு வகிக்கும். இலங்கைக்கு எதி ரான தொடரில் டாப் ஆர்டர் வரிசை சரிவை சந்தித்த போதும் ஜானி பேர்ஸ்டோவ் மிடில் ஆர்டரில் பலம் சேர்த்தார்.

பாகிஸ்தான் அணியில் அனுபவ வீரர்களான மிஸ்பா, யூனுஸ்கான் ஆகியோருடன் நல்ல பார்மில் உள்ள ஆசாத் ஷபிக் ஆகியோர் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கக் கூடும். தொடக்க ஜோடியான முகமது ஹபீஸ், ஷான் மசூத் சமீபகால போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை.

இதேபோல் இங்கிலாந்து தொடக்க வீரர்களான அலாஸ்டர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி யும் தடுமாற்றம் கண்டுள்ளது. இங் கிலாந்து அணியில் ஜோ ரூட் அச்சுறுத்தும் வீரராக விளங்கக் கூடும். மிடில் ஆர்டரில் விளையாடி வந்த இவர் சமீபகாலமாக 3-வது இடத்தில் களமிறக்கப்பட்டு வரு கிறார். இவரையும், குக்கையும் விரைவில் வீழ்த்தி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் அணி திட்டம் வகுக்கக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in