Last Updated : 12 Mar, 2017 12:51 PM

 

Published : 12 Mar 2017 12:51 PM
Last Updated : 12 Mar 2017 12:51 PM

காயம் காரணமாக ஸ்டார்க் விலகியதால் ஆஸி. அணியில் கம்மின்ஸ் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக விலகிய மிட்செல் ஸ்டார்க்குக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணி யில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கால் பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஸ்டார்க் தொடரில் இருந்து விலகியிருந்தார். அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள கம்மின்ஸ் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி யில் மட்டுமே விளையாடி உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் டில் விளையாடிய அவர் 2-வது இன்னிங்ஸில் 79 ரன்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் டிரேவர் ஹான்ஸ் கூறும்போது,

‘‘இந்திய தொடரில் மிட்செல் ஸ்டார்க் விளை யாட முடியாமல் போனது மிகவும் வருத்தமான விஷயம். அவருக்கு மாற்றாக பாட் கம்மின்ஸை தேர்வு செய்துள்ளோம். சர்வதேச ஒருநாள் போட்டி, டி20 மற்றும் பிக்பாஷ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேலும் 6 வருடங்களுக்கு பிறகு நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக ஷெபீல்டு ஷீல்ட் தொடரில் விளையாடிய கம்மின்ஸ் முதல் இன்னிங்ஸில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்களையும் 2-வது இன்னிங்ஸில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வானார்’’ என்றார்.

ராஞ்சியில் உள்ள ஆஸ்தி ரேலிய அணியிருடன் கம்மின்ஸ் நேற்று இணைந்தார். 3-வது டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x