Published : 28 Oct 2014 21:23 pm

Updated : 28 Oct 2014 21:23 pm

 

Published : 28 Oct 2014 09:23 PM
Last Updated : 28 Oct 2014 09:23 PM

செயலூக்கம் மிகுந்த பிரதமர் நரேந்திர மோடி: சானியா மிர்சா புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி 'மிகுந்த செயலூக்கம் உடையவர்" என்று டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா புகழ்ந்து பேசியுள்ளார்.

உலக டென்னிஸ் கூட்டமைப்பு டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதை பிரதமர் மோடி பாராட்டியது பற்றி அவர் கருத்தைக் கேட்டபோது இவ்வாறு கூறினார் சானியா மிர்சா.

"நரேந்திர மோடி ஒரு தீவிர செயலூக்கம் மிக்க ஆளுமை. அவர் ஒரு மகத்தான தலைவர். நான் அவரை இருமுறை சந்தித்துள்ளேன். அவர் எனக்கு சில முறை ட்வீட் செய்துள்ளார். அது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

நான் எப்போது வெற்றி பெற்றாலும் அவர் என்னை ஊக்குவிக்கத் தவறுவதில்லை. ஒரு நாட்டின் பிரதமர் விளையாட்டு வீரர்களின் சாதனையை இனம் கண்டு பாராட்டுதல்களை அளிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்” என்று சானியா மிர்சா புகழ்ந்து பேசினார்.


சானியா மிர்சாடென்னிஸ்பிரதமர் நரேந்திர மோடிட்விட்டர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author