இந்திய ஒரு நாள், டி20 அணியில் அக்‌ஷர் படேல், மணீஷ் பாண்டே

இந்திய ஒரு நாள், டி20 அணியில் அக்‌ஷர் படேல், மணீஷ் பாண்டே
Updated on
1 min read

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அக்‌ஷர் படேல், மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்‌ஷர் படேல் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், இவர் சாம்பியன்ஸ் லீக், ஐபிஎல் போட்டிகளில் அருமையாக விளையாடி வருபவர். மணீஷ் பாண்டே சமீப காலங்களில் நன்றாக ஆடிவருபவர், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருபவர்.

இந்திய ஒருநாள் போட்டி அணி:

ஷிகர் தவன், அஜிங்கிய ரஹானே, விராட் கோலி, ரெய்னா, ராயுடு, தோனி, ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஷ் குமார், மொகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல்.

இந்திய டி,20 அணி வருமாறு:

தோனி, ஷிகர் தவன், அஜிங்கிய ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஸ்டுவர்ட் பின்னி, ரவீந்தர் ஜடேஜா, அக்‌ஷர் படேல், கரண் ஷர்மா, புவனேஷ் குமார், மொகமது ஷமி, சஞ்சு சாம்சன், மணீஷ் பாண்டே, உமேஷ் யாதவ்.

டி20 அணியிலாவது ராபின் உத்தப்பாவுக்கு மற்றுமொரு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சேவாக் மீண்டும் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது இது நிறைவேறாவிட்டாலும் சஞ்சு சாம்சனை டி20 அணியில் தேர்வு செய்துள்ளனர். ஆனால் மணீஷ் பாண்டே, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோரை களத்தில் விளையாடும் 11 வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்வது தோனியின் கையில்தான் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in