பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன்

பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன்
Updated on
1 min read

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது.

பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல்பர் நிஷாத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இரு கைகளும் இல்லாதவரான பிரேசிலை சேர்ந்த ஜோனதன் பாஸ்டோஸ், கால்களால் கிதார் இசைத்து அசத்தினார். தொடர்ந்து கேபி அமர்டான்ஸ், பெர்ணாண்டஸ், வன்சியா டி மட்டா உள்ளிட்டோரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றவரான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கொடி அணிவகுப்பின் போது, இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார். 2020 பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இதையொட்டி ரியோ நகர மேயர் எடுரடோ பயஸ், பாராலிம்பிக் கொடியை சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தலைவர் கிராவனிடம் ஒப்படைத்தார். அவர் அதனை டோக்கியோ நகர கவர்னர் யூரிகோ கொய்கியிடம் ஒப்படைத்தார்.

இதன்பின் ஜப்பான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜப்பானின் பிரபல மாடலான ஜிமிகோ மேடையில் தோன்றி, இடது காலை இழந்தவரும், தொழில்முறை நடன கலைஞரு மான கோச்சி ஒமியை அறிமுகப் படுத்தினார். பின்னர் அவர் நடனம் ஆடி பார்வையாளர்களை அசத்தினார். தவிர, ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா போல பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவுவிழாவும் வண்ணமயமான வாணவேடிக்கையுடன் கோலாகல மாக நிறைவடைந்தது.

107 தங்கப் பதக்கங்கள் உட்பட 239 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து 147 பதக்கங்களுடன் உள்ளது. இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் இந்த பதக்க பட்டியலில் இந்தியா 43வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in