Last Updated : 05 Apr, 2017 06:46 PM

 

Published : 05 Apr 2017 06:46 PM
Last Updated : 05 Apr 2017 06:46 PM

2016-ம் ஆண்டு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி: விஸ்டன் அறிவிப்பு

2016-ம் ஆண்டு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்று விஸ்டன் அறிவித்துள்ளது. இது அவரது தற்போதைய சாதனைகளுக்கு புதிய மகுடம் சூட்டுகிறது.

கடந்த ஆண்டு விராட் கோலி 1215 டெஸ்ட் ரன்களை 75.93 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். 10 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 739 ரன்கள், சராசரி 92.37, டி20 கிரிக்கெட்டில் 642 ரன்களை 106.83 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

ஒரு கால்ண்டர் ஆண்டில் 6 பேட்ஸ்மென்களே அதிக ரன்களைக் குவித்துள்ளனர். ஆனால் இவை எதுவுமே விராட் கோலியின் சராசரிக்கு அருகில் இல்லை.

2017 விஸ்டன் கிரிக்கட்டர்ஸ் அல்மனாக் அட்டைப்படத்தில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். 2003-ம் ஆண்டு இந்த விருது அறிவிக்கப்பட்டது, முதலில் இதைப் பெற்றது ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆண்டி 5 கிரிக்கெட் வீரர்களுக்கான விஸ்டன் பட்டியலில் மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் என்று முதல் முறையாக 2 பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் பென் டக்கெட், ரோலண்ட் ஜோன்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x