டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியல்: ஏஞ்சலிக் கெர்பர் முன்னிலை

டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியல்: ஏஞ்சலிக் கெர்பர் முன்னிலை
Updated on
1 min read

டென்னிஸ் வீராங்கனைகளுக் கான தரவரிசைப் பட்டியலில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

சிறந்த டென்னிஸ் வீராங்கனை களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஜெர்மனி வீராங்கனை யான ஏஞ்சலிக் கெர்பர் முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் மொத்தம் 6,965 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் ரொமேனிய வீராங்கனை சிமோனா ஹெலப் 6,850 புள்ளி களுடன் 2-வது இடத்திலும், செஸ் நாட்டு வீராங்கனை பிளிஸ்கோவா 6,386 புள்ளிகளுடன் 3-வது இடத் திலும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக டென்னிஸ் போட்டி களில் இருந்து விலகியிருக்கும் செரீனா வில்லியம்ஸ் 4-வது இடத்தில் உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in