முகமது அலியின் இறுதிச்சடங்கு லூயிஸ்வில்லியில் வெள்ளிக்கிழமை நடக்கிறது: பில் கிளிண்டன் பங்கேற்கிறார்

முகமது அலியின் இறுதிச்சடங்கு லூயிஸ்வில்லியில் வெள்ளிக்கிழமை நடக்கிறது: பில் கிளிண்டன் பங்கேற்கிறார்
Updated on
1 min read

பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி

பிரபல குத்துச்சண்டை வீரர் முக மது அலியின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான லூயிஸ் வில்லியில் வரும் வெள்ளிக் கிழமை நடக்கிறது. இதில் அமெ ரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கலந்துகொள்கிறார். முகமது அலியின் இறுதிச் சடங்கில் பங் கேற்க பொதுமக்களுக்கு முகமது அலியின் உறவினர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலி கடந்த வெள்ளிக் கிழமை சுவாசக் கோளாறு கார ணமாக காலமானார். முகமது அலியின் மரணத்தைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள குத்துச் சண்டை ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லூயிஸ்வில்லியில் உள்ள முகமது அலி மையத்தில் ரசிகர்கள் மலர் கொத்துகளை வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முகமது அலியின் மரணத்தை முன்னிட்டு லூயிஸ்வில்லியில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

இந்நிலையில் முகமது அலியின் உடல் இஸ்லாமிய முறைப்படி வரும் வெள்ளிக்கிழமையன்று அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகரில் அடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். முகமது அலியின் இறுதிச் சடங்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொள் வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதில் மக்கள் கலந்து கொண்டு முகமது அலிக்கு அஞ் சலி செலுத்த அவரது குடும்பத் தினர் அனுமதி அளித்துள்ளனர். இறுதிச் சடங்குக்கு முன்னதாக முகமது அலியின் உடலை லூயிஸ் வில்லி தெருக்கள் வழியாக ஊர்வ லமாக எடுத்துச் செல்லவும் அவரது உறவினர் கள் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in