

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்டுவர்ட் லா, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளராக 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான ஸ்டுவர்ட் லா இதற்கு முன்னர் இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். அவர் கூறும் போது,“மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக பணியாற்ற கிடைத்த இந்த வாய்ப்பை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இது எனது வாழ்க்கையில் மிகமுக்கியமான பணியாக இருக்கும்’’ என்றார்.
ஸ்டுவர்ட் லா, ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும், 54 ஒருநாள் போட்டி களிலும் விளையாடி உள்ளார். இதுதவிர குயின்ஸ்லாந்து, எசக்ஸ், லான்ஷையர், டெர்பி ஷையர் அணிகளுக்காக பல்வேறு முதல்தர போட்டிகளில் பங்கேற் றுள்ளார்.
ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டி களில் வெற்றிகரமான கேப்டனா கவும் ஸ்டுவர்ட் லா வலம்வந் துள்ளார். 5 முதல்தர போட்டிகளி லும், ஒருநாள் போட்டிதொடரிலும் தனது அணிக்காக அவர் கோப்பை வென்று கொடுத்துள்ளார். 367 ஆட்டங்களில் 27,080 ரன்கள் சேர்த்துள்ளார். 1998-ல் விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருதையும் வென்றுள்ளார் ஸ்டுவர்ட் லா.
மேற்கிந்தியத் தீவுகள் வாரியத்தின் இயக்குநர் ரிச்சர்டு பைப்ஸ் கூறும்போது, “மேற்கிந்தி யத் தீவுகள் கிரிக்கெட்டுக்கு ஸ்டுவர்ட் லாவை வரவேற்கி றோம். இக்கட்டான சூழ்நிலை யில், அணியை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் ஸ்டூவர்ட் எங்களுடன் இணைந்துள் ளார். வீரர், பயிற்சியாளராக அவரது அனுபவம் அணியை முன்னேற்றம் செய்வதில் பெரிய சொத்தமாக இருக்கும்’’ என்றார்.