Published : 10 Aug 2016 09:24 AM
Last Updated : 10 Aug 2016 09:24 AM

ரியோ ஹாக்கி: இந்திய மகளிரணி தோல்வி

ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-3 என கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜப்பானுக்கு எதிராக டிரா செய்திருந்தது. இந்நிலையில் 2-வது போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தது. தொடக்கம் முதலே இங்கிலாந்து வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். 25-வது நிமிடத்தில் அந்த அணியின் ஆன்ஸ்லே முதல் கோலை அடித்தார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் நிக்கோலே கோல் அடிக்க இங்கிலாந்து அணி முதல் பாதியில் 2-0 வலுவான முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்தின் ஆதிக்கமே தொடர்ந்தது. 33-வது நிமிடத்தில் அலெக்ஸ் டான்சன் கோல் அடித்து அசத்தினார். இந்திய அணி கடைசி வரை போராடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x