

பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி யில் தங்கப் பதக்கம் வென்ற தங்க வேலு மாரியப்பன், வெண்கலப் பதக்கம் வென்ற வருண் பட்டி ஆகியோருக்கு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரியோ நகரில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் தங்கவேலு மாரியப்பன் தங்கப் பதக்கத்தையும், வருண் பட்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தீபா கர்மகார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஒலிம்பிக் போட்டியில் என்னால் சாதிக்க முடியாததை நீங்கள் சாதித்துள்ளீர்கள். உங்கள் இருவரையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபா கர்மகாரின் பயிற்சியாளரான பிஷ்வேஷ்வர் நந்தியும் இரு வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.