ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 8-வது இடம்

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 8-வது இடம்
Updated on
1 min read

இன்சியானில் நடைபெற்ற 17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆசியக் கோப்பையில் பெற்ற இடத்தைக் காட்டிலும் 2 இடங்கள் பின் தங்கியது.

இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள், மொத்தம் 57 பதக்கங்களுடன் 8ஆம் இடத்தில் முடிந்தது. 2010ஆம் ஆண்டு 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலத்துடன் மொத்தம் 65 பதக்கங்களை வென்று 6-வது இடம் பிடித்தது.

சீனா 151 தங்கத்துடன் 342 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தது. தென் கொரியா 234 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்துள்ளது. ஜப்பான் 200 பதக்கங்களுடன் 3-வது இடம் பிடித்துள்ளது.

ஒட்டு மொத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த முறை 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியில், தேசத் தந்தை மகாதம காந்தி பிறந்த நாளில் தங்கம் வென்றது மறக்க முடியாதது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in