"டக்" அடித்த வாட்சன் நீக்கம்

"டக்" அடித்த வாட்சன் நீக்கம்
Updated on
1 min read

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், 2-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன், ஷேன் வாட்சனுக்கு ஒரு சிறிய இடைவெளி கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in