Last Updated : 31 Jul, 2016 10:33 AM

 

Published : 31 Jul 2016 10:33 AM
Last Updated : 31 Jul 2016 10:33 AM

ரியோ 2016: 3-வது முறையாக தங்க வேட்டைக்கு உசேன் போல்ட் தயார்

உலகின் அதிவேக மனிதர் என்ற பெருமை பெற்றவர் பிரபல தடகள வீரர் உசேன் போல்ட். உலகிலேயே அதிக வேகமாக ஓடக்கூடியவர் என்பதை அவர் பங்கேற்கும் போட்டிகளில் அனைத்திலும் நிரூபித்து வருகிறார்.

ஜமைக்காவை சேர்ந்த 30 வயதான உசேன் போல்ட் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளராக திகழ்கிறார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தை 9.69 வினாடியில் கடந்து சாதனை படைத்தார். இதேபோல 200 மீட்டர் ஓட்டத்தில் 19.30 வினாடியில் கடந்து சாதனை புரிந்து தங்கம் வென்றார்.

அதோடு 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார்.

2009-ம் ஆண்டு பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்திலும், 200 மீட்டர் ஓட்டத் திலும் தனது ஒலிம்பிக் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 வினாடியிலும், 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 வினாடியிலும் கடந்து உசேன் போல்ட் புதிய உலக சாதனை புரிந்து இரண்டிலும் தங்கம் வென்றார்.

இதன்மூலம் உலக மற்றும் ஒலிம்பிக் போட்டியில் ஒரே நேரத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனை மற்றும் தங்கம் வென்ற உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் போல்ட்.

2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் உசேன் போல்ட் ஆதிக்கம் செலுத்தினார். அவர் 100 மீட்டர் ஓட்டத்தை 9.63 வினாடியில் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். லண்டன் ஒலிம்பிக்கிலும் 3 தங்கம் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) வென்றார். ஒலிம்பிகில் அவர் மொத்தம் 6 தங்கம் வென்றுள்ளார்.

பிரேசில் ஒலிம்பிக் போட்டி உசேன் போல்டுக்கு சவாலாக இருக்கலாம். ஆனாலும் தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். ஒலிம்பிக் போட்டி தொடர்பாக அவர் கூறும்போது, “ரியோ ஒலிம்பிக்கில் 3 வித ஓட்டத்திலும் மீண்டும் தங்கம் வெல்வதே எனது இலக்கு.

200 மீட்டர் ஓட்டத்தை 19 விநாடிகளில் எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க விரும்புகிறேன். 100 மீட்டர் ஓட்டத்தில் என்னை அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் முந்துவார் என சிலர் கூறுகின்றனர். இதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது’’ என்றார்.

உசேன் போல்டை வெற்றி பெற யாராலும் முடியாது என்று கூறப்பட்டா லும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் கேட்லின் முயற்சித்தால் போல்ட்டின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது.

பெய்ஜிங்கில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டி யில் கேட்லின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நூலி ழையில்தான் உசைன் போல்டிடம் வெற் றியை பறிகொடுத்தார்.

இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜஸ்டின் கேட்லின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறும்போது, "ரியோவில் உசேன் போல்ட்டை வீழ்த்தி சாதனை படைப்பேன். அவரை வீழ்த்திய பின்னர் பெறும் பதக்கத்தை அணிந்து கொண்டு அமெரிக்கா முழுவதும் சுற்றி வருவேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x