Last Updated : 05 Sep, 2016 01:09 PM

 

Published : 05 Sep 2016 01:09 PM
Last Updated : 05 Sep 2016 01:09 PM

கிரிக்கெட் வீரர் தோனி மீதான குற்றவியல் நடவடிக்கைள் ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத உணர்வுகளை அவமதித்ததாக கிரிக்கெட் கேப்டன் தோனி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் வணிக இதழ் ஒன்றில் கேப்டன் தோனியை விஷ்ணு போல் சித்தரித்து அட்டைப்படம் வெளியானது. அதாவது படத்தில் உள்ள தோனிக்கு பல கைகள், ஒவ்வொரு கையிலும் ஒரு வர்த்தகப் பொருளை வைத்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டது. இதில் ஷூவும் உண்டு. கட்டுரையின் தலைப்பு சர்ச்சைக்கு இடமளிக்கும் விதமாக God of Big Deals என்று கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவது போன்று உள்ளது என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ரஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .ஆந்திரத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆந்திரத்தில் வழக்கு தொடர்ந்தவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் ஆவார்.

இதனையடுத்து தோனி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த கோர்ட் உத்தரவிட்டது. ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் உத்தரவையும் பிறப்பித்தது.

இதனை எதிர்த்து தோனி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றதையடுத்து தோனி மீதான குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x