

தென்னிந்திய சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற ஜூடோ போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபாரைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த சுகாஸ், பூபதி ராஜா, தேஜன், ஆர்த்தி, சேதுப்பிரியா, கியூபா பாரதி, சர்மா தேவி, தர்ஷினி ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், சஞ்சித், தீர்த்தனா, சங்கரபாண்டியம்மாள், வர்தினி, ரித்திகா, நவீனா, கேத்ரின் ஜீவா, தீபிகா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், சந்தோஷ்குமார், கரண்,சிவபிரகாஷ், ஜெயசத்யன், ஸ்ரீமதி, ஹர்ஷிதா, கிருத்திகா, சவுமியா, சுவாதி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
மொத்தம் 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் இவர்கள் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பரணி வித்யாலயா பள்ளித் தாளாளர் எஸ்.மோகனரங்கன், செயலர் பத்மாவதி, தமிழ்நாடு ஜூடோ சங்க மாநிலத் துணைத் தலைவர் சி.ராமசுப்பிரமணியன், பள்ளி முதல்வர் சுதாதேவி, பயிற்சியாளர்கள் துரை, சாமுவேல், முத்துலட்சுமி, சிவகாமி ஆகியோர் பாராட்டினர்.