

3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா நல்ல தொடக்கம் காணவில்லை, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 31 ரன்களை எடுத்துள்ளது.
ராகுல், ரஹானே ஆடி வருகின்றனர்.
பிட்சில் ஓரளவுக்கு நல்ல பவுன்ஸ் உள்ளது. 3-வது ஓவரில் 1 ரன் எடுத்த நிலையில் ஷிகர் தவண், கேப்ரியல் வீசிய விக்கெட் வீழ்த்தும் சாத்தியமற்ற லெக் திசை பந்தை ஆட முற்பட்டு கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது. தேவையற்ற ஆட்டம்.
ஒன்றாம் நிலையில் விராட் கோலி இறங்கினார். 8 பந்துகளைத்தான் சந்தித்தார், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோசப் அவரை பவுன்சர் மூலம் வரவேற்றார். இதில் கொஞ்சம் நிலை தடுமாறினார் கோலி. அடுத்த பந்து 5-வது ஸ்டம்ப் லைன், கோலி பீட்டன் ஆனார்.
3 ரன்கள் எடுத்த நிலையில் ஜோசப் மீண்டும் அடுத்த ஓவரை வீச வர 3-வது பந்து எதிர்பார்த்ததை விட எகிறியது வேகமும் இருந்தது, ஷாட்டை செக் செய்தார் காரணம் கூடுதல் பவுன்ஸ், மட்டையில் பட்டு ஸ்லிப் திசையில் பிராவோவிடம் உயரமாகச் சென்றது. பிராவோ பிடிக்க கோலி வெளியேறினார், ஜோசப்பிற்கு முதல் டெஸ்ட் போட்டியிலேயே பரிசு விக்கெட்டாக வீழ்ந்தார் கோலி.