

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஜ்குமார் 46 ரன்கள் எடுத்தார்.
150 ரன்கள் இலக்குடன் விளையாடிய மதுரை அணி 16.1 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. காரைக்குடி அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் மதுரை அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வி கண்டது.
142 ரன் இலக்கு
தொடரின் 17-வது ஆட்டத்தில் நேற்று நத்தத்தில் திருவள்ளூர் வீரன்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 59 ரன் எடுத்தார்.
தூத்துக்குடி தரப்பில் பாலாஜி 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி அணி பேட் செய்ய தொடங்கியது.
இன்றைய ஆட்டம்
தொடரின் 18-வது ஆட்டத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நத்தத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.