

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் உலக அளவிலான ரயில்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியன் ரயில்வே அணியில் இடம் பெற்றிருந்த ரத்னாகரன், ரவிசந்திரன் கூட்டணி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் இந்தியன் ரயில்வே அணி ரஷ்யா அணியை வீழ்த்தியது.
இதேபோல் குவாஹாட்டியில் நடைபெற்ற அகில இந்திய ரயில்வே டேபிள் டென்னிஸ் போட்டியில் தெற்கு ரயில்வே ஆடவர் அணி 13 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. தனிநபர் பிரிவில் பிரபாகரன் பட்டம் வென்றார். வினோத் 2-வது இடம் பிடித்தார்.