இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு: வ.தேசம் பேட்டிங்

இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு: வ.தேசம் பேட்டிங்
Updated on
1 min read

ஓவலில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத்துக்குப் பதில் ஜேக் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்டோக்ஸ் ஆடுகிறார். வங்கதேச அணியில் இம்ருல் கயேஸ், ரூபல் ஹுசைன் ஆடுகின்றனர்.

ஓவல் மைதானத்தில் முதலில் பேட் செய்து அதிக ரன்களை எட்டுவது கடினம், குறிப்பாக பகல் ஆட்டங்களில் கடந்த 5 போட்டிகளாக முதலில் பேட் செய்யும் அணியின் சராசரி இன்னிங்ஸ் ஸ்கோர் 213 ரன்களே.

இந்நிலையில் மோர்கன் மிகத் தெளிவாக வங்கதேசத்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். டாஸில் தோற்ற மஷ்ரபே மோர்டசாவும் உடனே தான் டாஸ் வென்றிருந்தாலும் பவுலிங்தான் செய்திருப்பேன் என்றார். கூடுதல் பேட்ஸ்மெனை சேர்த்ததன் மூலம் ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர், இளம் திறமை மெஹதி ஹசர்ன் மிராஸை உட்கார வைத்துள்ளதற்கான பலனை வங்கதேசம் ஆட்டம் முடிந்த பிறகு உணரும் என்று எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளெங்கெட், மார்க் உட், ஜேக் பால்.

வங்கதேச அணி:

தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயேஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், சபீர் ரஹ்மான், மஹமுதுல்லா, மொசடெக் ஹொசைன், மஷ்ரபே மோர்டசா, முஸ்தபிசுர் ரஹ்மான், ரூபல் ஹுசைன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in