ஓட்டப்பந்தயத்தில் உசேன் போல்ட்டை வெல்வேன்: ஆன்ட்ரே டி கிராஸ் நம்பிக்கை

ஓட்டப்பந்தயத்தில் உசேன் போல்ட்டை வெல்வேன்: ஆன்ட்ரே டி கிராஸ் நம்பிக்கை
Updated on
1 min read

ஓட்டப் பந்தயத்தில் உசேன் போல்ட்டை ஆகஸ்ட் மாதம் வெல்ல தனக்கு வாய்ப்பு இருப்பதாக பிரபல தடகள வீரர் ஆன்ட்ரே டி கிராஸ் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

தடகளத்தில் உசேன் போல் டுக்கு அடுத்ததாக பிரபல ஓட்டப் பந்தய வீரராக இருப்பவர் ஆன்ட்ரே டி கிராஸ். கடந்த ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத் தில் வெள்ளிப் பதக்கத்தையும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் அவர் வென்றுள் ளார். கனடாவைச் சேர்ந்த இவர், உசேன் போல்டுக்குப் பிறகு தடகள சாம்பியனாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள தடகள போட்டியில் உசேன் போல்ட்டை வெல்ல தனக்கு வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தடகள போட்டியில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித் துள்ள உசேன் போல்ட், வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வார் என்று நம்புகிறேன். இதில் அவரை வெல்ல கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். இப்போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்டை வெல்ல எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நான் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் அவரை வெல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in