2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது நியூஸிலாந்து

2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது நியூஸிலாந்து
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

கிரைஸ்ட் சர்ச் நகரில் நடை பெற்ற இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங் ஸில் 84.3 ஓவர்களில் 289 ரன் களுக்கு அனைத்து விக்கெட்களை யும் இழந்தது. சவுமியா சர்க்கார் 86, ஷாகிப் அல் ஹசன் 59 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 71 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. டாம் லதாம் 68, ராஸ் டெய்லர் 77 ரன்கள் சேர்த்தனர். ஹென்றி நிக்கோல்ஸ் 59, டிம் சவுத்தி 4 ரன்களுடன் களத்தில் இருந் தனர்.

நேற்று முன்தினம் மழை காரணமாக ஒருபந்துகூட வீசப் படாமல் 3-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஹென்றி நிக்கோல்ஸ் 98, சவுத்தி 17, வாக்னர் 26 ரன்களில் ஆட்டமிழக்க 92.4 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 354 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

வங்கதேசம் தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்கள் கைப் பற்றினார். 65 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 52.5 ஓவர்களில் 173 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மஹ்முதுல்லா 38, சவுமியாக சர்க்கார் 36, தஸ்கின் அகமது 33 ரன்கள் எடுத்தனர்.

நியூஸிலாந்து அணி தரப்பில் டிரென்ட் போல்ட், கிராண்ட் ஹோம், வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். இதை யடுத்து 109 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜீத் ராவல் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டாம் லதாம் 41, கிராண்ட் ஹோம் 33 ரன்கள் சேர்த்தனர். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in