Last Updated : 03 Jun, 2016 09:34 AM

 

Published : 03 Jun 2016 09:34 AM
Last Updated : 03 Jun 2016 09:34 AM

இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் போட்டி அட்டவணை அறிவிப்பு- ஜூலை 21-ல் முதல் டெஸ்ட் போட்டி

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

49 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய அணி ஜூலை 6-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளை சென்றடைகிறது.

தொடர்ந்து 9 மற்றும் 10-ம் தேதிகளில் வார்னர் பார்க்கில் இரு நாட்கள் பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது. இதே மைதானத்தில் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் கொண்ட இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்கிறது.

முதல் டெஸ்ட் 21-ம் தேதி அன்டிகுவாவிலும், 2-வது டெஸ்ட் 30-ம் தேதி ஜமைக்காவிலும், 3-வது டெஸ்ட் ஆகஸ்ட் 9-ம் தேதி செயின்ட் லூசியாவிலும், 4-வது டெஸ்ட் ஆகஸ்ட் 18-ம் தேதி டிரினிடாட்டிலும் தொடங்குகிறது. 49 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி 23-ம்தேதி தாயகம் புறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x