சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி: ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி: ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை மையமாக வைத்து ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடைபெறக்கூடும் என ஆல் இந்தியா கேமிங் பெடரேஷன் என்ற அமைப்பு கணக்கிட்டுள் ளதாக தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் தொழில்நுட்ப ரீதியாக சூதாட்டம் சட்டப்பூர்வமாக உள்ளது. சூதாட்ட தரகர்கள் இந்தியா தான் வெற்றி பெறும் என கருதுகிறார்கள். இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறும் என 100 ரூபாய் கட்டுபவர்களுக்கு ரூ.147 தான் கிடைக்குமாம். ஆனால் அதேவேளையில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என 100 ரூபாய் கட்டுபவர்களுக்கு ரூ.300 கிடைக்கும்.

ஆல் இந்தியா கேமிங் பெட ரேஷன் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான ரோலண்ட் லேன்டர்ஸ் கூறும்போது, “ஆண்டு முழுவதும் இந்தியா விளையாடும் போட்டிகளின் மூலம் தோராயமாக ரூ.2 லட்சம் கோடி சூதாட்டம் வாயிலாக வசூல் செய்யப்படுவது பல்வேறு ஆய்வுகள் மூலம் மதிப்பிடப் பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் முதன்முறையாக இறுதிப் போட்டி யில் சந்திப்பதால், சூதாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது” என்றார்.

ஆனால் இந்தியாவில் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால், இங்கிலாந்து நாட்டின் இணையத் தளங்கள் வாயிலாக சர்வதேச கிரெட்டி கார்டு, இ-வாலட்ஸ் ஆகியவற்றின் மூலம் ரசிகர்கள் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடும் எனவும் ஆல் இந்தியா கேமிங் பெடரேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in