Last Updated : 17 Jan, 2017 10:34 AM

 

Published : 17 Jan 2017 10:34 AM
Last Updated : 17 Jan 2017 10:34 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் முர்ரே, கெர்பர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு ஆண்டி முர்ரே, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஆண்டி முர்ரே, உக்ரைன் நாட்டு வீரரான இலியா மார்சென்கோவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் ஆண்டி முர்ரே, 7-5, 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 2-வது சுற்றில், அவர் ரஷ்ய வீரரான ஆண்ட்ரே ரூப்லேவை எதிர்த்து ஆடவுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்டி முர்ரே 5 முறை இறுதிப் போட்டியில் தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஆண்டி முர்ரே, “ஆஸ்திரேலிய ஓபனில் நான் பலமுறை தோற்றுள்ளேன். இருப்பினும் இங்கு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு வெற்றி பெறும்வரை நான் தொடர்ந்து போராடுவேன்” என்றார்.

ஆண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஸ்டான் வார்ரிங்கா மிகக் கடுமையாக போராடி 4-6, 6-4, 7-5, 4-6, 6-4 என்ற செட்கணக்கில் ஸ்லோவாக் வீரரான மார்டின் லிசானை வீழ்த்தினார். இப்போட்டி 3 மணிநேரம் 24 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 7-5, 3-6, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் ஆஸ்ட்ரியாவின் மெல்சரை வென்றார்.

மற்றொரு போட்டியில் ஜப்பான் வீரரான நிஷிகோரி, 5-7, 6-1, 6-4, 6-7 என்ற செட்கணக்கில் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே கஸ்நெட்சோவை வீழ்த்தினார். ஆண்களுக்கான பிரிவில் நடந்த மற்ற முதல் சுற்று போட்டிகளில் தாமஸ் பெர்டிக், சாம் குர்ரே, சோங்கா ஆகியோரும் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் லெசியாவுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் பாய்ந்து சென்று பந்தை திருப்பி அடிக்கிறார் ஏஞ்சலிக் கெர்பர். படம்: கெட்டி இமேஜஸ்

பெண்கள் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியில் முன்னணி வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், உக்ரைன் வீராங்கனையான சுரென்கோவை 6-2, 5-7, 6-2 என்ற செட்கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே நேரத்தில் மற்றொரு முன்னணி வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை யான ஷெல்பி ரோஜர்ஸிடம் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மற்றொரு ஒற்றையர் போட்டி யில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 7-5, 6-4 என்ற நேர் செட் களில் நியூஸிலாந்தின் மரினா எராகோவிக்கை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பெண் களுக்கான முதல் சுற்று போட்டி களில் இரினா பெகு, மோனிகா பிக், வீனஸ் வில்லியம்ஸ் ஆகி யோரும் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x