அமெரிக்க ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி: செரீனா, பிளிஸ்கோவா அரை இறுதிக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி: செரீனா, பிளிஸ்கோவா அரை இறுதிக்கு தகுதி
Updated on
2 min read

அமெரிக்க ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் 2-ம் நிலை வீரரான இங்கிலாந் தின் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி யடைந்தார். மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், பிளிஸ்கோவா ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 2-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நிஷிகோரியுடன் மோதினார்.

இதில் நிஷி கோரி 1-6, 6-4, 4-6 6-1, 7-5 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. அமெரிக்க ஓபன் போட்டியில் நிஷிகோரி அரை இறுதிக்கு தகுதி பெறுவது இது 2-வது முறையாகும். கடந்த 2014-ம் ஆண்டு அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தார்.

இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இறுதிப் போட்டியில் கால் பதித்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன், ஒலிம்பிக் உட்பட தொடர்ச்சியாக 7 போட்டிகளில் பட்டம் வென்ற ஆன்டி முர்ரேவுக்கு இந்த தோல்வி அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.

26 வயதான நிஷிகோரி அரை இறுதியில், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார். வாவ்ரிங்கா கால் இறுதியில் 7-6, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 142-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தினார்.

கண்ணீர் சிந்திய போட்ரோ

இந்த தோல்வியால் டெல் போட்ரோ, கண்ணீர்விட்டு அழுதார். இதைக்கண்ட அமெரிக்க ரசிகர்கள் அவரை உடனடியாக ஆறுதல்படுத்த எழுந்து நின்று பலமாக கைதட்டினர். இதன் பின் மனதை ஆறுதல் படுத்திக்கொண்ட போட்ரோ இயல்பான நிலைக்கு திரும்பினார்.

இதுகுறித்து போட்ரோ கூறும்போது, "ரசிகர்களின் ஆறு தலை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. நான் போட்டியில் தோல்வியடைந்தி ருக்கலாம், ஆனால் இந்த சம்பவத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. இது போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெரியது. ரசிகர்களிடம் இப்படி ஒரு பாராட்டை நான் பெற நிச்சயம் பெருமைப்படுகிறேன்" என்றார்.

செரீனா வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 4-6 6-3 என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹலப்பை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி னார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 92-ம் நிலை வீராங்க னையான குரோஷியாவின் அனா கொஞ்ஜூவை எதிர்த்து விளையாடினார். இதில் பிளிஸ்கோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தார்.

முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பிளிஸ்கோவா அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை. மேலும் 18 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஓபன் அரை இறுதியில் கால்பதித்த முதல் செக் குடியரசு வீராங்கனை என்ற பெருமையையும் பிளி ஸ்கோவா பெற்றுள்ளார். அரை இறுதியில் பலம் வாய்ந்த செரீனாவை எதிர்கொள்ள உள்ளார் பிளிஸ்கோவா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in