

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி யில் ரஸ்ஸலின் இழப்பை ஈடுகட்ட மற்ற அனைத்து வீரர்களும் கடுமை யாக உழைக்க வேண்டும் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக் காக ஆந்திரே ரஸ்ஸல் ஆடிவந் தார். இந்நிலையில் ஊக்கமருந்து தொடர்பான விதியை மீறியதற் காக அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி யின் கேப்டன் கவுதம் காம்பீர் கூறியிருப்பதாவது:
கொல்கத்தா அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக ரஸ் ஸல் இருந்தார். அவரது இழப்பை ஈடுகட்டுவது மிகவும் கடினம். அதை ஈடுகட்ட வேண்டுமானால் அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அணியில் உள்ள இந்திய பேட்ஸ்மேன் களான மணிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், ராபின் உத்தப்பா ஆகியோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து மேலும் சிறப்பாக ஆட வேண்டும்.
கொல்கத்தாவில் உள்ள ஆடு களத்தில் பந்து நன்றாக எழும்பும் என்று கணிக்கப்படுகிறது. அத னால் எங்கள் அணியில் டிரெண்ட் போல்ட் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட், உமேஷ் யாதவ் ஆகியோரும் அவருக்கு பக்கபலமாக இருப்பார்கள். சுழற்பந்து வீச்சில் சுனில் நரைன் எங்களுக்கு வலு சேர்ப்பார். ஐபிஎல் தொடரை 3-வது முறை யாக வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற கடுமையாக போராடுவோம்.
இவ்வாறு கவுதம் காம்பீர் கூறினார்.
உமேஷ் யாதவ் ஆடுவார்
காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் ஆரம்ப கட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக் காக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியில் அவர் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான வெங்கி மைசூர், தனது ட்விட்டர் பக்கத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.